கடலில் மிதந்து வந்த பொதி வெடித்து இரு மீனவர்கள் படுகாயம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் நேற்றுமதியம் (நவம்பர் 21) மதியம் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர்கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட போது குறித்தபொதி வெடித்ததில் குறித்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்தஎஸ்.ரமேஷ் (வயது 37) மற்றும் ஏ. ஆரோக்கியநாதன் (வயது 37) என தெரியவந்துள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுமேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்த போது குறித்தபொதி வெடித்துள்ளதாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்கு மூலம்வழங்கி உள்ளனர்.

எனினும் மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் சிலர்தடை செய்யப்பட்ட டைனமைட்டு வெடி பொருளை பயன்படுத்தி மீன் பிடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article