கசூரினாவில் விஷப்பாசி தாக்கம்; ஆறுபேர் வைத்தியசாலையில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காரைநகரில் காசூரினா கடலில் நீராடிய ஆறுபேர், நேற்று (ஜனவரி 26) விஷப்பாசி தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறியப்படுகிறது.

காசூரினா சுற்றுலா மையம் தினசரி பல சுற்றுலா பயணிகளால் செலுத்தப்படும் பிரபல இடமாகும். யாழ்ப்பாணம் சென்ற சுற்றுலா பயணிகள் காசூரினா கடற்கரைக்கு செல்வதை தவிர்ப்பதில்லை என்றே கூறலாம். இந்த நிலையில், காசூரினா கடலில் நீராடிய ஆறுபேருக்கு விஷப்பாசி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து, காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் தனது கருத்தில், விஷப்பாசி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆறுபேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கியதாகவும், விஷப்பாசியை ஒழிக்க வேண்டிய பொருட்களாகிய வினாகிரியை (vinegar) வழங்கியதாகவும் தெரிவித்தார்.

முந்தைய நாட்களில் இவ்வாறான தாக்கம் ஏற்படவில்லை எனவும், திடீரென இந்த தாக்கம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Article