ஊா்காவற்துறை வைத்தியசாலையில் கதிாியக்கவியல் பிாிவு ஆரம்பிக்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
ஜனவாி 01 ஊா்கவற்துறை வைத்தியசாலை  அபிவிருத்தியின் அடுத்த படியாக கதிரியக்கவியல் பிரிவு (Radiology unit) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
வைத்திய அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,தீவக வடக்கு பிரதேச செயலர்,வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர்,மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவை உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கதிரியக்கவியல் பிரிவின் ஆரம்பம் தீவக மக்களுக்கான சுகாதார சேவைகளை மேலும் தரமுயர்த்தும் ஒரு வரப்பிரசாதமாகும்.
மேற்படி கதிரியக்கவியல் பிரிவை சிறப்புடன் ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களிற்கும் தீவக மக்கள் சார்பிலும் வைத்தியசாலை சமூகம் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்
Share this Article