ஊர்காவற்றுறை பிறீமியர் லீக்கில் இன்று ஐந்து போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் -KPL கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று ( ஏப்ரல் 13 ) காலை 8.30 மணிக்கு ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி 05 போட்டிகள் இடம்பெற்றது.

KPL இன் ஆலோசகரும் சட்டத்தரணியுமான ஜே. நிரோஜன், சென் அன்ரனிஸ் கல்லூரி அதிபர் வணபிதா அன்ரன் அமலதாஸ் அடிகளார், தான்தோன்றீஸ்வர அம்மன் ஆலய குரு பிரம்மஶ்ரீ வே. மகேஸ்வரசர்மா மற்றும் போட்டி குழுவினரின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு வைபவரீதியாக ஆரம்பமானது.

இந்த நிகழ்வின் இறுதியில் இன்றைய 05 போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

Share this Article