ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய பேரவையைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளசீட்டின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தெரிவாகியுள்ளார்.

இந்த விசேட அமர்வு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபுவின் தலைமையில், பிரதேச சபை சபாமண்டபத்தில் இடம்பெற்றது.

13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபையில்,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  04 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 03 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி  02 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 01 ஆசனம்

இத்தேர்தலில் தமிழ் தேசிய பேரவையைச் சேர்ந்த உறுப்பினர் அன்னராசா தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை, செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித் என்பவர் உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share this Article