ஊர்காவற்றுறை பிரதேச கொரோனா தடுப்புச் செயலணியின் அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு அனலைதீவு, எழுவைதீவிற்குள் அங்கு தற்போது வசிப்போரும் அத்தியாவசிய சேவை வழங்குபவர்களும் மாத்திரமே படகு பிரயாணித்தினை மேற்கொள்ள முடியும் என ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, தவிசாளர், பிரதேச செயலர் இணைந்து முடிவு செய்துள்ளோம்.
இத்தீவுகளில் தற்போது மிகவும் மட்டுபடுத்தப்பட்ட மருத்துவ வசதிகளே காணப்படுகின்றன. அத்தோடு கொரோனா நோயாளிகளை அங்கிருந்து பிரதான நிலப்பிரப்பிற்கு இடமாற்றம் செய்வதிலும் பலத்த இடர்பாடுகள் உள்ளன.
இப்பிரதேசங்களில் இதுவரை நோயாளிகள் இனங்காணப்படாத நிலையில் இப்பிரதேச மக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும்.
10.05.2021 முதல் மறு அறிவித்தல் வரை இந் நிலை நீடிக்கப்படும்.
ஊர்காவற்றுறை பிரதேச கொரோனா தடுப்புச் செயலணி
தகவல்:
கிருபாகரன் சதாசிவம்
Share this Article