ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை – மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்கமாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையைச் சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிசரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ..

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சுருவத்தை மதுபோதையில்இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாகஊர்காவற்றுறை பொலிசாருக்கு குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடுசெய்திருந்த நிலையில் பொலிசார் துரித நடவடிக்கையில் இறங்கியதன்அடிப்படையில் மேற்படி 8 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ஏனையோர் கைதானவர்களின் தகவலின்அடிப்படையில் தேடப்பட்டு வருகின்றனர்.

அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விசாரணைகளை அடுத்து குறித்த நபர்களை நீதிமன்றில்முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாதா சிலையினது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியானது எனவும் மாதா சுருவத்தை நேற்றையதினம் (ஜூலை25)  அடித்து உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Share this Article