ஊர்காவற்றுறை கல்வி வலையத்தில் எட்டுப் பாடசாலைகள் அதிபர்கள் இல்லாமல் இயங்குகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனலைதீவு அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாசாலை, அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, கரம்பொன் சிறிய புஸ்பமகளிர் வித்தியாசாலை, ஊர்காவற்றுறை மரியாள் உரோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாசாலை, நாராந்தனை கணேச வித்தியாசாலை, பருத்தியடைப்பு கதிரேசானந்தா வித்தியாசாலை. கரம்பொன் சண்முகநாதன் மகாவித்தியாலயம் ஆகிய எட்டு பாடசாலைகளே அதிபர்கள் இல்லாமல் இயங்குகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதுகுறித்து கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் தெரிவித் த்தாவது, சில அதிபர்களுக்குரிய நேர் முகத்தேர்வு இடம்பெற்று வருகின்றது. விரைவில் அந்தப் பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள் -என்றார்.