உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே18 அன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளாரின் 16ஆம் ஆண்டுநினைவுநாள் நிகழ்வு  இன்று (மே17) சனிக்கிழமை உருத்திரபுரம்புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின்ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கியூடெக் நிறுவனஇயக்குனர் அருட்தந்தை டெனிசியஸ் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலிஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து அகவணக்கம், அஞ்சலி உரை, ஈகைச்சுடர் ஏற்றல்என்பவற்றுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றதுடன் மறைந்த பங்குத்தந்தை நினைவாகவும் , ஏனையோர் நினைவாகவும்  ஆலய வளாகத்தில் அமைகப்பட்டுள்ள நினைவாலய பகுதியிலும் மலரஞ்சலி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இரத்தினபுரி மறைமாவட்டத்திலிருந்துவருகைதந்த இளையோர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article