இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தீவகப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்தார்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) இன்று (ஒக். 12) தீவகப் பகுதியின் கடற்றொழில் அமைப்புகள் மற்றும் தீவக பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, மற்றும் தீவக பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்கள், தீவகப் பகுதியின் பல்வேறு கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article