இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு – வவுனியாவில் மீண்டும் சம்பவம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கியநிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (ஜூன் 04) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின்சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சடலத்தில்இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்றகோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (ஜூன் 03) மாலை இளைஞர்குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை வவுனியா குற்றப்பிரிவுபொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.

Share this Article