இயற்கை ஆரோக்கிய உணவு விற்பனை நிலையம் திறப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவகம் அல்லைப்பிட்டி விவசாயி கிரிசன் அவர்களின் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் நேற்றைய தினம் (மார்ச் 20) அல்லைப்பிட்டி சந்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் விற்பனை நிலையம் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் யாழ் மாநகரசபை முதல்வர் கௌர திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.

அல்லை விவசாயி கிரிசன் அவர்கள் தீவகத்தில் சிறந்த முறையில் இயற்கை விவசாய உற்பத்திகளை மேற்கொண்டு வருவதுடன், நாடளவிய ரீதியில் 130 இற்கு மேற்பட்ட ஆரோக்கிய உணவு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article