ஆனையிறவு ‘ரஜலுணு’ உப்பு உற்பத்தி உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (மார்ச்29) வைபவ ரீதியாக இடம்பெற்றது.

நவீன வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு‘ உப்பு எனும் பெயருடன் அராசாங்க உப்பு தொழிற்சாலையை விருந்தினர்கள்இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்இ.சந்திரசேகரன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

Share this Article