அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (20/05) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது.

 இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும், விற்பனை விலை 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

 நேற்று (19/05) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

 இதேவேளை, இன்றைய தினம் அரச வங்கி ஒன்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 345.20 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் கொள்வனவு விலை 335.65 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article