அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவு ஐயனார் கோவிலில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பித்தளை கலசங்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

 அனலைதீவு ஐயனார் கோவிலில் 06 பித்தளை கலசங்கள் திருடப்பட்டமை தொடர்பில் குற்றச்செயல் தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, திருடப்பட்ட 06 பித்தளை கலசங்களும் மீட்கப்பட்டன.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Share this Article