அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கநடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துதிணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம்தெரிவித்துள்ளது.
வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 0703500525 என்றவட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்பு சந்தர்ப்பம்வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகைசான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம்கோரிக்கை விடுக்கின்றார்.
போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர்பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகனதிணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது நாட்டின்அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கூறினார்.
அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும்எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும்அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.