யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு நேரில் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர், அங்குள்ள தொழிற்சாலைகளின் தற்போதைய செயல்பாடுகள், உற்பத்தி முறைகள் மற்றும் கைத்தொழில் பேட்டையின் தொழிற்பாட்டு நிலவரங்கள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளுடனும் தொழிலதிபர்களுடனும் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த முக்கிய விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் உடன் இணைந்திருந்தனர்.
வட மாகாணத்தின் பொருளாதார மற்றும் கைத்தொழில் மேம்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.