வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர்இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் அர்ச்சுனாவுக்குஎதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின்அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில்எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுநீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

Share this Article