வேலணை பிரதேச சபையில் முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து EPDP ஆலோசனை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) வேலணை பிரதேச சபை உறுப்பினர்களுடன், நாளை புதன்கிழமை (17/06) நடைபெறவுள்ள மாதாந்த சபை அமர்வில் முன்வைக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (16/06) நடைபெற்றது.

கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில், வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா (போல்) முன்னிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, சபை அமர்வில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் சபையில் எடுத்துரைக்கப்பட வேண்டிய மக்கள் நலன் சார்ந்த விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.

மேலும், பிரதேசத்தின் அபிவிருத்தி, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment