ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பாரம்பரிய கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, ஊர்வகத்துறை காவலூர் கலைக்கழகத்திற்கு தேவையான இசைக்கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது
நீண்டகாலமாக இசைக்கருவிகள் இல்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட கூத்து கலைஞர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது.
இந்த இசைக்கருவிகள் அவர்களின் கலைப் பயணத்திற்கு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு, அழிவடைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீண்டும் இளைய தலைமுறையினரிடமும் சமூகத்தினரிடமும் கொண்டு சேர்க்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இதன்போது தெரிவித்தார்
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், ஊர்வகத்துறை பிரதேச செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.