அண்மையில் ஏற்பட்ட புரவி புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் நெடுந்தீவிலும் ஏற்பட்டிருந்தது. இப்பதிப்புக்களைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு புங்குடுதீவு சுழகம் அமைப்பினரால் உதவித்திட்டங்கள் நெடுந்தீவில் வழங்கி வைக்கப்பட்டது.
தென்மராட்சி சேவை மன்றத்தின் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக நெடுந்தீவில் வெள்ள அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 240 குடும்பங்களுக்கு கடந்த 24ம் திகதி நெடுந்தீவில் வைத்து சுழகம் அமைப்பினரால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.
இச் செயற்பாடு சுழகம் அமைப்பின் செயலாளரும் வேலைணைப் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவா்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இச் செயற்பாட்டின் கீழ் கொவிட் 19 பாதுகாப்பு சுகாதார பொருட்கள், நுளம்பு வலை, பாய் தலையணி, வெட்சீட், குளோாின், பனடோல், சித்தாலப்பே போன்ற வழங்கி வைக்கப்பட்டன.
நெடுந்தீவு மேற்கு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கும், மகாவித்தியாலய சுற்றாடலில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கும், கிழக்கு சுப்பரமணிய வித்தியாலய பகுதியில் பாதிக்கப்பட்ட 80குடும்பங்களுக்குமாக மொத்தம் 240 குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கனடாவில் வசிக்கின்ற நெடுந்தீவின் மைந்தர்களான திரு . கண்ணன் , திருமதி ஆனந்தி , திரு .ஜனார்த்தனன் மற்றும் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி பத்மாஜனதேவி தர்மராஜா ஆகியோரின் நிதியுதவி ஊடாக இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் வடகாணசபை உறுப்பினா் விந்தன் கனகரத்தினம், சூழகம் அமைப்பின் நிா்வாக குழு உறுப்பினா்களான கருணாகரன் குணாளன் மடுத்தீன் பெனடிற் (சின்னமணி) மதுவாணன், ருத்திரன் மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினா்களான திருமதி பரமேஸ்வாி, திருமதி சிந்தைகுலநாயகி உட்பட பர சமூக செயற்பாட்டளா்களும் மேற்வடி நிகழ்வுகளில் கலந்து கொண்டனா்.