வெடுக்குநாரி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து நேற்று (மார்ச் 28) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் நல்லூர் – நல்லை ஆதினம் முன்பாக சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார், மத குருமார்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.