RIRA Construction பெருமையுடன் நடாத்தும் வவுனியா மாவட்டத்தின் நாளைய தலைமுறைக்கான பாராட்டுவிழா நாளை (ஒக்ரோபர் 29) காலை 09.00 மணிக்கு Nelly Star Grand Hotel இல் இடம்பெறவுள்ளது.
வவுனியா மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டத்தின் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு பிரம்மாண்டமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
RIRA Construction பிரதம நிறைவேற்று பணிப்பாளர் U.K Ranjith இன் ஒழுங்கமைப்பு மற்றும் முழுமையான அனுசரணையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் RIRA Construction சார்பில் வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் இணைப்பில் இடம்பெறவுள்ளது.
இந்த நிழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்சுமணன் இளங்கோவன் அவர்களும், சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்டத்தின் கல்விப் பணிக்காக சிறப்புற வழிகாட்டும் வவுனியா தெற்குக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய அன்னமலர் சுரேந்திரன், வவுனியா வடக்குக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய T. லெனின் அறிவழகன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சகல துறைகளையும் சேர்ந்த 110 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். நவீன தொழினுட்ப வசதிகளோடு மாணவர்களின் கௌரவிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களினுடைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் முதல்நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்களைக் கௌரவிக்கும் முகமாக விசேட பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை சிறப்பான அம்சமாகும்.
மேலும் வவுனியா மாவட்டத்தின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கவும், பல்கலைக்கழகத்திற்கு திறமை அடிப்படையில் மாணவர்கள் உட்செல்வதை ஊக்குவிப்பதற்காகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து வருடாவருடம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென RIRA Construction உடைய பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.