குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவூட்ட நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குழந்தை வளர்ப்புக் கலை பற்றி தெளிவூட்டும் வேலைத் திட்டத்தை குடும்ப சுகாதாரப் பிரிவு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் குடும்ப சுகாதார அதிகாரிகள் மூலமாகவும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

‘பெற்றோரின் சித்திரச் சிட்டுகள்’ எனும் தலைப்பில் இது நடைமுறைப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டம் பற்றி ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் சந்திப்பு நேற்றுமுன்தினம் குடும்ப சுகாதாரப் பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் வைத்திய நிபுணர்களான சித்ரமாலினி சில்வா, தர்ஷினி ஹெட்டயாராச்சி மற்றும் ஆசிரியர் ஹேவா மாலினி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரி வித்தனர்.

Share this Article