வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தது – நெடுந்தீவு ஊரும் உறவும் குழு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நெடுந்தீவு மேற்கு பிரதான வீதி திருத்தம், உள்ளூர் மற்றும் கடற் போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுற்றுலாத்துறை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆளுநருக்கு தொரியப்படுத்தியபோது இவ் விடயங்கள் தொடர்பில் தாம்  நடவடிக்கையினை ஏற்கெனவே தொடர்ந்துள்ளதாகவும், இவை தொடர்பாக தாங்களாக முன்வந்து தெரியப்படுத்தியமையும் இப்பணிகளை விரைந்து செயற்படுத்த உந்துசக்தியாக இருக்கும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நெடுவூர்த் திருவிழாவின் போது குறித்த ஒரு தினத்தில் ஆளுநர் தானும் கலந்துகொள்ளவுள்ள தகவலையும் குழுவினரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article