வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் உட்பட அனைத்து மாகாண ஆளுநர்களும்தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். ஏற்கனவே சில மாகாணஆளுநர்கள் தமது பதவியை
இராஜினாமாச் செய்துள்ளதுடன் நேற்றையதினம் வடமாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரும் தமது பதவிகளைஇராஜினாமா செய்துள்ளனர்.
வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை நேற்று முன்தினம் அனுப்பிவைத்ததாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அதேபோன்று நேற்றையதினம் மேல் மாகாண ஆளுநர் விமானப்படை மார்ஷல்ரொஷான் குணதிலக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமதுஇராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் புதிய அரசாங்கம்அமைக்கப்பட்டுள்ளதையடுத்து நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், மாகாணஆளுநர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்களென பல உயர் பதவிகளில்உள்ளோர் தமது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.
அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் உட்பட அனைத்துமாகாணங்களினதும் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமாசெய்துள்ளனர்.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்திஸாநாயக்க, தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,வடமேல்மாகாண ஆளுநர் நசீர் அகமட், ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே, மேல்மாகாண ஆளுநர் விமானப்படை மார்ஷல் ரொஷான் குணதிலக, வடமாகாணஆளுநர் திருமதி சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரே தமது பதவிகளைஇராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் இராஜினாமா தொடர்பில் நேற்று அரசாங்க வர்த்தமானிஅறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.