நெடுந்தீவில் சாரண பயிற்சிநெறியை உத்தியோகபூர்வமாக நேற்றையதினம் (ஜூலை26) ஆரம்பித்துவைத்தார் அரச அதிபர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கானசாரணர் பயிற்சியினை யாழ் மாவட்ட பதில் அரச அதிபரும் யாழ் மாவட்ட சாரணஆணையாளரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்றையதினம் (ஜூலை26) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இந் நிகழ்வின் போது  யாழ் மாவட்ட பதில் அரச அதிபரும் யாழ் மாவட்ட சாரணஆணையாளரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் “சாரணியதினூடாகமாணவர்கள் எதிர்கால வாழ்க்கையினை இலகுவாக முகம் கொடுக்கும் வகையில்வளருவதுடன், ஆளுமைமிக்க  ஒத்திசைவான மாணவர் சமுதாயம் ஒன்றுஉருவாக்க நாம் எமது பங்களிப்பை வழங்குவது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நெடுந்தீவு  பிரதேச செயலர், பாடசாலைஅதிபர்,ஆசிரியர்,மாணவர்கள், பெற்றோர்கள்,உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றையதினம் (ஜூலை 27) பயிற்சி பெற்ற சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article