யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது

தகவல் அறிந்தது விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் , வைத்தியசாலை ஊழியர்கள், பொலிசார், மற்றும் முப்படையினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளன. இது ஒட்டுமொத்த வடமாகாண சுகாதார சேவையையும் உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், தீயில் ஏரிந்துள்ள நிலையில் கட்டடம் உள்ளிட்டவையும் கடும் சேதமடைந்துள்ளன.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து தற்போது மருந்து களஞ்சிய சாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை குறித்த களஞ்சிய
சாலை பகுதிக்குள் அண்மையில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டப்பட்ட அறை அமைக்கப்பட்டதாகவும் , அதில் ஏற்பட்ட மின் கசிவு , இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.