யாழில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 03 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது
நடைபெற்ற 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலிலய யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு 03 ஆசனங்கள், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன தலா ஒரு ஆசனங்களைப் பெற்றுள்ளன.
வாக்குகளின் படி வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்ட தமிரசுக்கட்சி 112,917 வாக்குகளும் சைக்கிய் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 55,503 வாக்குகளும் கை சின்னத்தில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி 49,373 வாக்குகளும், வீணைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிக்கு 45,727 வாக்குகளும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் கூட்டணிக்கு 35,900 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வீதம் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் வீழ்ச்சி நிலையினை ஏற்படுத்தியுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது இரண்டு ஆசனங்களுடன் ஒரு போனஸ் ஆசனத்தினையும் பெற்றே 03 ஆசனங்களைப் பெற்றுள்ளார்கள் விருப்பு வாக்குகள் நாளை தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆயினும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கே விருப்பு வாக்குகள் அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது