மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாவை சேனாதிராஜா அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சைபெற்று வருகின்றார். இன்று (ஜனவரி 28) காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்துமேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப்பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில்செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என யாழ் போதனாவைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article