இன்று முதல் பெப்ரவரி 01 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை. – நாகமுத்து பிரதீபராஜா –

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 27.01.2025 திங்கட் கிழமை காலை 11.00 மணி வானிலை அவதானிப்பு.

இலங்கைக்கு தெற்கு தென்கிழக்காக மிகப் பரந்த அளவிலான வளிமண்டலமேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக;

முன்னரே குறிப்பிட்டபடி நாளை முதல் ( 28.01.2025) எதிர்வரும் 03.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானதுமுதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

1. நாளை முதல் (28.01.2025) எதிர்வரும் 01.02.2025 வரை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரைமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் ஒரு சில பகுதிகளுக்கு மிகக்கனமழைகிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. அதேவேளை எதிர்வரும் 02.02.2025 முதல் வடக்கு மாகாணத்தில் மழைபடிப்படியாக குறைவடையும்.

3. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 04.02.2025 முதல் மழை படிப்படியாககுறைவடையும்.

4. ஆகவே விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைமற்றும் அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

Share this Article