மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தின் மாணவி யோ.லக்சாயினி முதன் முதலாக ரைக்கொண்டோ தற்காப்புகலை போட்டியில் பங்குபற்றி பாடசாலையின் வரலாற்றில் முதலாவது தேசிய ரீதியிலான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
2 ஆம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை தனதாக்கி பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் மடுக்கல்வி வலயத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.