பிரித்தானியாவில் இணைய வழி ஊடாக நி;னைவேந்தல் இடம் பெற்றது.
பிரித்தானியாவில் இன்றைய தினம் குமுதினிப் படகில் கொலை செய்யப்பட்ட உறவுகளது 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்ப இணையவழி ஊடாக இடம் பெற்றது.
ஒவ்வொரு வருடமும் பிரித்தானியாவில் இன்றைய தினத்தில் (மே – 15) நினைவு கூரப்படுவது வழமை அது போல் இம் முறையும் திரு.கா.சாந்தலிங்கம் மற்றும் அவர்களது நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும் தீவக உறவுகள் இணைந்து கொண்டு கண்ணீர்; காணிக்கைகளை செலுத்தியதுடன் நிகழ்வுகளின் தன்மைகளையும் ஞாபகப்படுத்தினார்கள்.
நெடுந்தீவின் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த குமுதினி நிகழ்வு எதிர்கால இளைஞர்கள் மத்தியிலும் கடத்தப்படுவது போற்றதற்குரியது.