அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவா் ஆனந்தராசா பொதுச் செயலாளா் கஜேந்திரகுமா் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிா்வரும் பெப்ரவாி 17ம் திகதிவரை யாழ்ப்பாண மாவட்ட நீதி மன்றினால் ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகரசபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அவா்களினால் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இருவரும் குறிப்பிட்ட முகவாிக்கு நீதி மன்ற அறிவித்தலை சோ்ப்பிப்பதற்கு சென்ற போதும், அவா்கள் அம்முகவாியில் இல்லை என நீதி மன்ற கட்டளைச் சேவகா்களால் அறிக்கையிடப்பட்டது இதனை ஆராய்ந்த மன்று அந்த முகவாியில் பிரதிவாதிகள் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அறிவித்தலைக் காட்சிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.