“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் வாக்கிற்கு இணங்க மக்களிடையே பாரம்பரியத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு மூலிகையில் உணவு தயாரிக்கும் உணவகச் செயற்பாடு இன்று (செப்ரெம்பர் 12) காரைநகர் பிரதேச சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் உணவக இயக்குநராக பிரபல சித்த ஆயுள்வேத வைத்தியர் ஜெ.ஜெயலன்(சுஜிவா வைத்தியசாலை) முகாமையின் கீழ் இயங்கவுள்ளது.
இன்றைய இயற்கை உணவகத்தை சபை செயலாளர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் உணவக செயற்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இச் செயற்பாடு பாரம்பரிய(இயற்கை) உணவகம் தொடர்பாக சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.