நெடுந்தீவு வைத்தியசாலை பரிசாரகருக்கு பணிஓய்வு சேவைநலன் பாராட்டு நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சுகாதார துறையில் பத்தொன்பது வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நெடுந்தீவைச் சேர்ந்த பெண் பரிசாரகர் திருமதி.ச.மரியரோகன விமலறாஜினி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14 இல் இருந்து நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் கடமையின் போது அரச பணியில் ஒய்வு பெற்றுச்சென்றுள்ளார்.

அவ்வகையில் அவரது தன்னலமற்றதும் சக ஊழியருடனான ஐக்கியமானசேவைக்காகவும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பிரிவுபசார வைபவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அவரது சேவையினை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அவரதுஓய்வுகாலம் சிறப்பாக அமைய சக ஊழியர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article