நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (பெப்.15) கிளிநொச்சி லயன்ஸ் கழகத்தினரால் உதவிப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சகிச்சை பெறும் நோயாளர்களுக்குதேவையான தலையணை மற்றும் தலையணை உறைகள் , குழந்தைகளிற்கானபால்மா பெட்டிகள்மற்றும் வைத்தியசாலை சிறுசெலவிற்காக பத்தாயிரம் பெறுமதியான காசோலையும் வழங்கியிருந்தனர்.
அவ்வகையில் நெடுந்தீவு வைத்தியசாலை சார்பாக கிளிநொச்சி லயன்ஸ்கழகத்தினருக்கு வைத்தியசாலை நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.