நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப்பெட்டிகள் உலங்குவானூர்தியில் யாழ் கொண்டுவரல் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.10 மணிக்குவாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்தரையிறங்கியது.

நெடுந்தீவிலுள்ள 03 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து நெடுந்தீவு மகாவிதரதியாலய மைதானத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு வருகைதந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உதவித்தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ், மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்கஆகியோா் வரவேற்றார்கள்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 65.9 வீதமானவாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம்பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரைஇடம்பெற்றதுடன் அஞ்சல் மூல வாக்களிப்பையும் கருத்திற்கொண்டு குறித்தவாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்

Share this Article