நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் பூர்ண புஸ்கலை தேவி சமேத அரிகரபுத்திர திருக்கோவில் வருடாந்த மகோற்ஷவம் – 2025 எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் ஓகஸ்ட் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத் திருவிழா மற்றும் சப்பரத் திருவிழா என்பன இடம்பெறவுள்ளது.
மறுநாள் ஓகஸ்ட் 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தேர்த் திருவிழா இடம்பெறுவதுடன் மாலை 4.00 மணியளவில் சமுத்திர தீரத்தோற்சவமும் , தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.