நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற செயலமர்வு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாணவர்கள் , பெற்றோருக்கான குடும்ப வலுவூட்டல்  செயலமர்வு நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த புதன்கிழமை (ஜூன்05) நெடுந்தீவு பிரதேச செயலக ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலக சமுதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்திஉத்தியோகத்தர் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஆகியோர் குறித்த செயலமர்வில் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த செயலமர்வில் மாணவர்களின் மனதில் காணப்படும் எதிர்மறைஎண்ணங்களை நீக்கி மகிழ்சிகரமாக கல்வியை முன்னெடுக்கும் வகையில் கருத்துரை வழங்கல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article