“நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா “ அமைப்பினால் பாண்ட் வாத்திய இசைக்கருவிகள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பாவனைக்காக இன்றையதினம் (பெப். 19) உத்தியோகபூர்வமாக அன்பளிப்பாக கையளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் நெடுந்தீவு நிர்வாகக் கிளைத்தலைவர் எ.அருந்தவசீலன்அவர்களால் வித்தியாலய பாண்ட் அணி தலைவரிடம் கையளிக்கப்ட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஐ. தயாபரன் , வடக்கு மாகாண கல்வி கலாசாரவிளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக்டிரஞ்சன் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கே்தீசன், தீவக கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து சிறப்பித்திருந்தனர்.
இன்று கையளிக்கப்பட்ட பாண்ட் வாத்திய கருவிகளை பயன்படுத்தியே விருந்தினர்களை அழைத்து செல்லும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.