நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான வழிபாட்டு ஒழுங்குகளை நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் இன்று(ஜூன் 15) ஆரம்பமாகும் நவநாள் வழிபாடுகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும் 24ஆம் திகதி புனிதரின் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நவநாள் வழிபாடுகளில் மறையுரையை அமல மாரித்தியாகிகள் துறவறசபையின் ஆமீர் அடிகளார் வழங்கவுள்ளதுடன் வழிபாடுகளையும் நெறிப்படுத்தவுள்ளார்.
நவநாள் வழிபாடுகள் தினமும் 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பலியும் இடம்பெறவுள்ளது.
திருவிழா திருப்பலி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 06:00 மணிக்கு இடம்பெறவுமையும் குறிப்பிடத்தக்கது.