போதையை ஒழிப்போம் செயற்திட்டத்துக்கு அமைவாக புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று (மே-31) இடம்பெற்றது.
சமுர்த்தி தலைமை முகாமையாளர் ராஜ்பவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வை தொடர்ந்து அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் விழிப்புணர்வு செயற்திட்டம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட சமுர்த்தி அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.