நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் , வித்தியாலய தினம் இன்றாகும் (ஜூலை26). வித்தியாலய தினத்தை இன்றைய தினத்தில் கொண்டாடுவதற்கு பொருத்தமான சூழல் இன்மையால் அதாவது பாடசாலை திருத்தவேலை இடம் பெறுவதனாலும் மற்றும் இரண்டாம் தவணைப் பரீட்சை ஜூலை 28 இல் ஆரம்பமாகவுள்ளமையாலும் பாடசாலைத் தினத்தை அடுத்த மாதம் ஓகஸ்ட் 08 புதன் கிழமை அன்று மு.ப 11.30 மணிக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்நாளிலேயே தற்போதைய வித்தியாலயத்தினை அன்னம்மாள்பாடசாலை என ஆரம்பிக்க அரும்பாடு பட்ட பெரியவர்களையும் முதல் அதிபரானஅமரர் உயர்திரு. பி.சின்ராசா அவர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும்நன்றியோடு நினைவு கூர்வதுடன் அவ் அதிபருக்குப் பின்னர் பணியாற்றியஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் நன்றியோடு நினைவு கூர்வதுடன் இறைஆசிரியையும் வேண்டி நிற்பதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 08 அன்று இடம்பெறும் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டுசிறப்பிக்குமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.