நெடுந்தீவு சமுர்த்தி பிரிவினரால் சிறுவர் தினம் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு  பிரதேச சமுர்த்தி பிரிவினரால் சிறுவர் தினம்  சிறப்பான முறையில் நேற்றையதினம் (ஒக்ரோபர் 01) இடம்பெற்றது.

பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செல்வி. நகுலறாணி தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம அதியாக யாழ் மாவட்ட  சமுர்த்தி பணிப்பாளர் எவ். சீ. சத்தியசோதி , நெடுந்தீவு  பிரதேச செயலாளர் திருமதி.நிவேதிதா கேதீசன்கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் வ.சுபாசன், யாழ் மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் கண்காணிப்பு முகாமையாளர் பாலகரன் , நெடுந்தீவு சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் சுதர்மினி , சமுர்த்தி கருத்திட்ட  முகாமையாளர் இ.இரத்தினபாலன் மற்றும் நெடுந்தீவு சமுர்த்தி வங்கிமுகாமையாளர் கோ.பாமினி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது நெடுந்தீவில் கல்வி கற்கும் தரம்01 தொடக்கம் தரம் 05 வரையானமாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதுடன் இவர்களுக்கு தலா 02 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது.

Share this Article