நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையினால் நடாத்தப்பட்ட “BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் நாளை (ஜூலை14).

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட   ஆயர் அருட்கலாநிதி இராஜப்புஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக நெடுந்தீவு கத்தோலிக்கதிருஅவையினால் நடாத்தப்பட்ட “BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் நாளை (ஜூலை14) பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில்  இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகள் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வின்  பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி ஆர். அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

வவுனியா மறையுரைஞர் குழுமத்தை சேர்ந்த அருட்பணி டிலோசன் அடிகள், நெடுந்தீவு இந்துமத குரு பிரம்மஶ்ரீ கா.புவனேந்திரசர்மா, நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை போதகர் எழிலமுதன், நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி சுகிர்தசெல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும்,

நெடுந்தீவு பிராந்திய கடற்படை பொறுப்பதிகாரி, நெடுந்தீவு வைத்திய அதிகாரிகள், நெடுந்தீவின் உயர்தர பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வுகள் அனைத்தும் எமது  இணையத்தளம் ஊடாக நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article