நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினரால் பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள்வழங்கல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைத்தீவை பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் பசுந்தரை நிறுவனம் , நெடுந்தீவுஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து நெடுந்தீவில் மரநடுகை திட்டநிகழ்வினை ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த வாரம் நெடுந்தீவில் உள்ள சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. விதியாலயம், சுப்பிரமணிய வித்தியாலயம் , மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயம் என்பவற்றுக்கு நிழல்தரும் மரங்களும் , மூலிகை மரங்களும்  நெடுந்தீவு ஊரும் உறவும் நிர்வாகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.

ஏற்கனவே மரக்கன்றுகள் கடந்த ஜூலை மாதம் நெடுந்தீவு பிரதேசவைத்தியசாலைக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்கு பசுந்தரை நிறுவனத்தினர் மற்றும் நெடுந்தீவு பிரதேசஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article