நெடுந்தீவில் விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வதற்காக முதற்கட்டமாக 0.5 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு நிதிவழங்குனர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவில் வாழும் உறவுகளுக்காக நெடுந்தீவு ஊரும் உறவும்(DO-U) அமைப்பின் “நல்வாழ்வு நம்கையில்” எனும் விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான திட்ட அறிக்கை தாயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 28 ஆம் திகதி மு.ப.10:00 மணி அளவில் நெ.ஊரும் உறவும் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
விவசாயத்துறை சார்ந்தோரை இதில் கலந்துகொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.