நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே1 இல் விளையாட்டு நிகழ்வுகள் நெடுந்தீவில் நடாத்தப்படவுள்ளது .
ஆண், பெண் இருபாலாருக்குமான தனித்தனியாக வீதியோட்டப்போட்டி மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி என்பனவும்,
ஆண்களுக்கான தெப்பம் வலித்தல் போட்டி மற்றும் நீச்சல் போட்டி என்பனவும் மே தினத்தன்று இடம்பெறவுள்ளது.
போட்டிகளில் வெற்றிபெறும் வீர வீரங்கனைகளுக்கான பரிசில்கள் பின்னர் நடாத்தப்படவுள்ள விழாவில் வைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீதியோட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும் இருபாலாரும் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை அதிகாரியிடமிருந்து எதிர்வரும் ஏப்ரல் 28,29,30 திகதிகளில் தவறாது பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
போட்டிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0766186316 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.