அரச கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஒரு குற்றமில்லை – ரணில்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது ஒரு குற்றமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கானஆணைக்குழுவிலிருந்து வெளியேறியவுடன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசாங்கத்தின் வைப்புத்தொகையில் இருந்து பணம் எடுத்து அதனை முதலீட்டுமற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இடும் போதே பொருளாதாரம்வளர்ச்சியடையும்.

மாறாக, நாம் பணத்தை மீண்டும் வைப்புத்தொகையிலேயே இட்டால்பொருளாதரம் வளர்ச்சியடையாது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தசெயன்முறையையே பின்பற்ற வேண்டும்.

அரசாங்கத்தை நடத்துவதற்காகவே வைப்புத்தொகை உள்ளது. அரசாங்கத்தைநடத்துவதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” எனத்தெரிவித்துள்ளார். 

Share this Article